திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பாண்டுரங்கன் தெருவைச் சேர்ந்தவர் கண்ணப்பன்(27) மனைவி புஷ்பா(22). இவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த புஷ்பா நேற்றிரவு வீட்டினருகே நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
கணவர் வீட்டில் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் புஷ்பாவை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட புஷ்பாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பரிசோதனையில், அவர் பாம்பு கடித்து உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து நசரத்பேட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். ஆறு மாத கர்ப்பிணிப் பெண் பாம்பு கடித்து உயிரிழந்ததுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு - நடுங்கிய வீரர்கள்!