கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் உணவின்றி தவித்துவருகின்றனர். இதனை உணர்ந்த தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் உணவில்லாமல் தவித்து வரும் மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சித் தலைவர் சித்ரா ரமேஷ், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளுக்கும் தினசரி உணவு அளித்துவருகிறார்.
பூண்டி ஒரு வனப்பகுதி என்பதால் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. பொதுவாக வெளியில் சுற்றித் திரியும் குரங்குகள், பறவைகள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும் உணவுப் பொருட்களை சாப்பிடுவது வழக்கம்.

ஆனால், ஊரடங்கு உத்தரவு காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் கடைகளும் இயங்காததால் உணவு இல்லாமல் குரங்குகள் அவதிப்படுகின்றன. இதனால், பூண்டி ஊராட்சித் தலைவர் சித்ரா ரமேஷ், குரங்குகளுக்கு சப்பாத்தி ரொட்டி பழவகைகள் போன்றவற்றை தினசரி உணவாக அளித்துவருகிறார். இவரது சேவையை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரளத்தில், கரோனா சிகிச்சை மையமாக மாறும் படகுகள்!