ETV Bharat / state

திருவள்ளூரில் பரவும் மர்மக் காய்ச்சல்...!

திருவள்ளூர்: மாங்காடு பகுதியில் மழைநீர் தேங்கி, மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

poonamalle people demand to corporation
author img

By

Published : Sep 1, 2019, 4:55 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மங்காடு பேரூராட்சிக்குட்பட்ட சக்ரா நகர், பட்டூர் கூட்டு சாலை உள்ளிட்டப் பகுதிகளில் வசிப்பவர்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த சில தினங்களாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "மாங்காடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களில் முறையாக மழை நீர் செல்வதில்லை. மேலும், மழைக்காலங்களில் மழை நீர் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்பதால் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி விட்டது. இதனால் நாங்கள் அடிக்கடி மர்மக் காய்ச்சலுக்கு ஆளாகி மிகவும் சிரமப்படுகிறோம்.

குறிப்பாக பட்டூர் கூட்டு சாலை, தோப்புத் தெரு பகுதிகளில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் பூந்தமல்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சிலர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெய்யும் மழை! பரவும் டெங்கு...!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கான சான்றுகள் ஏதும் கொடுக்க மறுப்பதாக சிகிச்சை பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த மர்மக் காய்ச்சல் பல்வேறு இடங்களுக்குப் பரவாமல் இருக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:மாங்காடு பகுதியில் வேகமாக
பரவும் மர்ம காய்ச்சல். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதி.

Body:மங்காடு பேரூராட்சிக்குட்பட்ட
சக்ரா நகர், பட்டூர் கூட்டு சாலை
உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக அங்கு வசிப்பவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் : மாங்காடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களில் முறையாக மழை நீர் செல்வதில்லை மேலும் மழைக்காலங்களில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்பதால் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி விட்டதால் அடிக்கடி மர்ம காய்ச்சலுக்கு ஆளாகி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பட்டூர் கூட்டு சாலை
தோப்பு தெரு பகுதிகளில் தண்ணீர் தேவைக்காக வீடுகளில் உள்ள பெரிய, பெரிய பிளாஸ்டிக் கேன்களில் தண்ணீர் பிடித்து திறந்தவெளியில் வைப்பதால் அதில் இருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி கொசு தொல்லை அதிகரித்து உள்ளது இதன் காரணமாக இங்கு உள்ளவர்களுக்கு மர்ம காய்ச்சல் வந்துள்ளது. மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிலர் பூந்தமல்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சிலர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். Conclusion:மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மட்டும் பேரூராட்சி மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் வந்து மருந்து தெளித்து விட்டு செல்கின்றனர். மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றவர்களுக்கு டெங்கு காய்ச்சல் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கான சான்றுகள் ஏதும் கொடுக்க மறுப்பதாக சிகிச்சை பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த மர்ம காய்ச்சல் பல்வேறு இடங்களுக்கு பரவாமல் இருக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.