ETV Bharat / state

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு! - poonamalle accident death cctv

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சிக்னலில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது, பின்னால் வந்த லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டச் செய்திகள்  லாரி மோதி இருசக்கரவாகனத்தில் வந்தவர் உயிரிழப்பு  poonamalle accident death  poonamalle accident death cctv  poonamalle news
நின்று கொண்டிருந்த இருசக்கரவாகனத்தின் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு
author img

By

Published : Aug 12, 2020, 10:42 PM IST

திருவள்ளுர் அடுத்த புட்லூர் பகுதியை சேர்ந்த சுமன்(40), மதுரவாயலில் உள்ள அவரது மாமனாரை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சிக்னலில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த அவர் மீது பின்னால் வந்த லாரி பலமாக மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த சுமன் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது.

இந்த விபத்தில், சுமன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

நின்று கொண்டிருந்த இருசக்கரவாகனத்தின் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு

இந்தச் சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பான காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பத்து சவரன் நகைக்காக கொலை: இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.