ETV Bharat / state

திருத்தணி முருகன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

author img

By

Published : May 9, 2019, 12:24 PM IST

திருவள்ளூர்: திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க வேண்டி, கோயிலில் வருணபகவானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

திருத்தணி முருகன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக, இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவின்படி, திருத்தணி முருகன் கோயிலில் மழை வேண்டி வருணபகவானுக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

திருத்தணி முருகன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

இதற்காக கோயில் உற்சவர் மண்டபத்தில் வருண பகவானுக்கு, சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டு மேலும் கலச பூஜையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருத்தணி கோயில் தக்கார் ஜெய்சங்கர், மேலாளர் பழனி அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Intro:திருத்தணி முருகன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் மழை வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. திருத்தணி மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த ஆண்டு பருவமழை பெய்து விட்டதால் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதை அடுத்து இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின்படி திருத்தணி முருகன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் வருணபகவானுக்கு நடத்தப்பட்டது.இதற்காக கோயில் உற்சவர் மண்டபம் அருகில் ஒரு யாகசாலை ஒன்பது கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.தொடர்ந்து கலச பூஜை வருண பகவானுக்கு மழை வேண்டி சிறப்பு வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓதி வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் திருத்தணி கோயில் தக்கார் ஜெய்சங்கர் மேலாளர் பழனி அருணாச்சலம் உள்பட பலர் யாகத்தில் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.