இருசக்கர வாகனத்தில் வந்த மணி என்ற இளைஞர் திருத்தணி மாம்பாக்கம் சத்திரம் சாலையோரம் மயங்கிய நிலையில் இருந்தார். அவ்வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மணி சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் இறந்தார்.
இதையடுத்து அவரின் உறவினர்கள் 60-க்கும் மேற்பட்டோர் திருத்தணி காவல் நிலையத்தில் மணி சாவில் மர்மம் உள்ளதாக புகார் கொடுத்தனர். அப்போது காவல் துறையினர் சரியான முறையில் பதில் கூறாததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் திருத்தணி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்
மணி ஓட்டிவந்த வாகனத்தில் அவர் இறந்துபோகும் அளவுக்கு எந்த ஒரு சேதாரமும் இல்லை என்றும் இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் வலியுறுத்தினர். காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.