திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே இளைஞர்கள் சிலர் அரசால் தடைசெய்யப்பட்ட சீட்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே சாதாரண உடையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் நீலமேகம், ஊர்க்காவல்படை வீரர் கணேசன் ஆகியோர் அவர்களைத் தட்டிக்கேட்டுள்ளனர்.
அப்போது சீட்டாடிய கும்பல் காவல் துறையினரிடம் தகராறில் ஈடுபட்டு அவர்களைப் பிடித்துக் கீழே தள்ளியதில் காவலர் நீலமேகத்தின் கை முறிந்துள்ளது.
இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் காவலர் சிகிச்சைப் பெற்றுவருகிறார். காவலரிடம் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கிய கும்பலை சோழவரம் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஏழு நிமிடங்களில் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆனேன் - கேரி கிரிஸ்டன்!