திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தை சேர்ந்தவர் கோகுலக்கண்ணன்(23). இவர் தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து தெருவில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அப்போது கேக்கை பெரிய வாள் கொண்டு வெட்டி உறவினர், நண்பர்களுக்கு கேக்கை பகிர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ, வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது. இதனை அறிந்த திசையன்விளை காவல்துறையினர், வாள் கொண்டு கேக் வெட்டிய கோகுலக்கண்ணன் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களை கைது செய்துள்ளனர்.
மேலும், வாளை கொண்டு கேக் வெட்டும் எண்ணம் எப்படி ஏற்பட்டது, அந்த இளைஞர்கள் வேறு எதாவது குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் கைது - வாளால் கேக் வெட்டிய இளைஞர்
திருநெல்வேலி: திசையன்விளை அருகே வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.