திருவள்ளூர்: தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர், தமிழரசன் (35). இவரது மனைவி பிரியா. தமிழரசன் தனியார் தொழிற்சாலையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார் .
இந்நிலையில், தமிழரசனின் மனைவி, அவரது தாய் வீட்டுக்குச் சென்றிருப்பதால், தமிழரசன் அருகேவுள்ள தனது தங்கை வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர், அன்றிரவு வீடு திரும்பிய அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

போலீஸ் விசாரணை
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த எட்டு சவரன் நகைகள், கால் கிலோ வெள்ளிப் பொருள்கள், வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி வைக்கப்பட்டிருந்த ஏழு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தமிழரசன் உடனடியாக திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் திருட்டுக் கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கத்தி முனையில் செல்போன்கள் கொள்ளை - திருட்டு கும்பல் கைது