திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (40). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் திருமணம் மண்டபம் அருகே பிரியாணி கடை நடத்திவருகிறார். இவரது கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பிரியாணி கேட்டபோது அருணாச்சலம் தர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சிறிது நேரத்தில் அவரது கடைக்கு முன் இரண்டு பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி தீவைத்து தூக்கி எறிந்துள்ளனர். பின் அருகிலிருந்த வீட்டின் மீதும் ஒரு பெட்ரோல் பாட்டிலை வீசி எறிந்துள்ளனர்.
இது குறித்து அருணாச்சலம் கொடுத்த புகாரின்பேரில் திருமழிசை உடையார்கோவில் காலனியைச் சேர்ந்த எபிநேசன் (34), அவரது நண்பர்கள் உள்பட மூவர் மீது வெள்ளவேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மூதாட்டியிடம் செயின் பறித்த இருவர் கைது