திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட போலிவாக்கம் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி (37). இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராகப் பணிபுரிந்துவருகிறார்.
அதுமட்டுமல்லாது 2014ஆம் ஆண்டுமுதல் 350-க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்களுக்கு ESI ஜிஎஸ்டி ஐடி போன்ற சான்றுகள் வழங்கி அதன்மூலம் வருவாய் ஈட்டிவருகிறார்.
இந்த நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி காலை அந்தோணி, அவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த பணத்தை எடுக்கச் சென்றபோது அதில் 11 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், 6 சவரன் நகை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் மணவளநகர் ஆய்வாளர்கள், காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
இந்த விசாரணையில், அந்தோணி வீட்டிற்குச் சென்றுவந்த போலிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (22) என்பவர் வீட்டில் புகுந்து திருடியது தெரியவந்தது.
அந்தோணி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரது தந்தை அழகேசன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் புகுந்து அஜித்குமார் பீரோவிலிருந்த பணம், நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அஜித்குமாரை கைதுசெய்த காவல் துறை கொள்ளையடித்த 11 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், 6 பவுன் நகையை பறிமுதல்செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
ஆடிட்டர் வீட்டில் திருட்டு: ஒருவர் கைது! - திருவள்ளூர் மாவட்ட கொள்ளை சம்பவங்கள்
திருவள்ளூர்: ஆடிட்டர் வீட்டில் திருடிய நபரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.