ETV Bharat / state

'பிணை இடைக்கால நிவாரணம்... விடுதலை என்ற முழுமை நிலையை எட்ட காலம் கைகூடவில்லை' -  அற்புதம்மாள் - பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் பேட்டி

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை விடுப்பில் உள்ள பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில், ஜோலார்பேட்டையிலிருந்து புழல் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டு சிறை நடைமுறைகளைப் பின்பற்றி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பிணையில் வெளிவந்த பேரறிவாளன்
பிணையில் வெளிவந்த பேரறிவாளன்
author img

By

Published : Mar 15, 2022, 9:31 PM IST

திருவள்ளூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறை தண்டனையில் உள்ளனர். இந்த நிலையில் அண்மையில் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் ஏற்கெனவே சிறைவிடுப்பில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் பிணை வழங்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு எதிர்ப்புத்தெரிவித்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிணை வழங்கக்கூடாது என வாதிட்டார். எனினும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் பிணை வழங்கப்படுகிறது என்றும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் பேட்டி

பிணையில் விடுவிப்பு

மேலும், சிறை விடுப்பில் இருந்தபோது பேரறிவாளன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும்; உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி பிணை வழங்கியது. இந்த நிலையில் சிறை விடுப்பில் வேலூரில் உள்ள தனது வீட்டில் இருக்கும் பேரறிவாளனை பிணையில் விடுவிப்பதற்கான சட்ட விதிமுறைகள்படி இன்று (மார்ச் 15) காலை வேலூரில் இருந்து புழல் மத்திய சிறைக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

பிணையில் வெளிவந்த பேரறிவாளன்
பிணையில் வெளிவந்த பேரறிவாளன்

அப்போது சிறை அலுவலர்கள் பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞரிடம் இருந்து உச்ச நீதிமன்றம் வழங்கிய பிணை ஆணை நகலை வாங்கி ஆய்வு செய்தபின், பேரறிவாளன் பிணையில் விடுவிக்கப்பட்டு வெளிவந்தார். புழல் சிறையில் இருந்து வெளியே வந்த பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள், அவரது வழக்கறிஞர்கள் சால்வை அணிவித்து கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அனைவருக்கும் நன்றி

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், "என் மகனுக்கு பிணை கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. 31 ஆண்டு காலப் போராட்டத்தில் மிகவும் முக்கியமான நாள் இது. விடுதலை என்ற முழுமையை நிலையை எட்ட காலம் இன்னும் கைகூடவில்லை. பிணை ஒரு இடைக்கால நிவாரணம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரும் முழுமையான விடுதலை பெறுகின்ற வரை அனைவரது ஆதரவும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு எங்களது போராட்டம் தொடரும்.

பிணையில் வெளிவந்த பேரறிவாளன்
பிணையில் வெளிவந்த பேரறிவாளன்

எங்களின் நீதிக்கான போராட்டத்திற்கு துணை நிற்கும் முதலமைச்சர், தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள், அனைத்து அரசியல் கட்சியினர், அமைப்பினருக்கும் நன்றி. பேரறிவாளனின் உண்மை நிலை உணர்ந்து ஆதரவு தந்த ஊடக நண்பர்கள், திரைப்படத்துறையினர், நண்பர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தாய்மார்கள் மற்றும் பொது மக்களுக்கு மனமார்ந்த நன்றி" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு விலக்கு சட்டமுன்வடிவு - குடியரசுத் தலைவருக்கு விரைந்து அனுப்புவதாக ஆளுநர் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.