திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்படும் கனிஸ்க் இரும்பு உருக்கு ஆலையில், சுமார் 7.45 ஏக்கர் பரப்பளவில புதியதாக விரிவாக்கம் செய்வதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
ஆனால் இந்தக் கூட்டத்திற்கு முறையான தகவல் அளிக்காததால் பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகோபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பாதியிலேயே கருத்துக் கேட்புக் கூட்டம் முடிவடைந்தது. புதிய இரும்பு உருக்காலை ஆரம்பிக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து நிலத்தடி நீர், காற்று பாதிப்பு அடையும் எனவே ஆலையை இப்பகுதியில் அமைக்கக்கூடாது என இக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.