திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா கிளிக்கொடி கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மிகவும் அசுத்தமாகவும், கால்வாயில் அதிகளவு நெகிழிக் குப்பைகள், மண் இருந்தன.
இதனால் கழிவுநீர் சரியாகச் செல்லாமல் தேங்கி நின்றது. இதனால் கொசுத்தொல்லை அதிகமாக இருந்தது. மக்கள் இரவில் நிம்மதியாக உறங்க முடியாமலும், பல்வேறு உடல் உபாதைக்கும் ஆளாகினர்.
மேலும் பல்வேறு காய்ச்சல், தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு இருந்ததால் மக்களின் சுகாதார நலனைக் கருத்தில்கொண்டு உடனடியாகக் கழிவுநீர் கால்வாயை சுத்தம்செய்ய கோரிக்கைவைக்கப்பட்டது.
அதனை ஏற்ற ஊராட்சி நிர்வாகம் இன்று (ஜூன் 5) கழிவுநீர் கால்வாயைச் சுத்தம் செய்தது. ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா புருஷோத்தமன், ஊராட்சி செயலாளர் விஜயன் ஆகியோருக்கு கிளிக்கொடி கிராம மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.