திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி புதுவாயல் பகுதியில் உள்ள ஏரியில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், மணல் குவாரியை மூடும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் எனக்கூறிய பொதுமக்களிடம் சமரசம் மேற்கொள்ள வந்த கவரைபேட்டை காவல் துறையினர் மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கதிர்வேலை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
லாரி, ஜேசிபி இயந்திரம் உள்ளிட்டவைகளை ஏரிக்கு உள்ளே சென்று மண் எடுக்க அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள், மணல் குவாரியை நிரந்தரமாக மூடும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனத் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, காவல் துறையினர், வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.