ETV Bharat / state

டிராக்டர் ஓட்டுநர் உயிரிழப்பு: உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு உறவினர்கள் சாலை மறியல்! - mysterious death in Thiruvallur

திருவள்ளூர்: மாந்தோப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த டிராக்டர் ஓட்டுநர் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டிராக்டர் ஓட்டுநர் உயிரிழப்பு
author img

By

Published : Oct 12, 2019, 9:52 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கூனிபாளையத்தில் உள்ள மாந்தோப்பில் ராஜாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் சந்திரய்யன் தூக்கிட்டு உயிரிழந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பென்னாலூர்பேட்டை காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், உடலை மீட்டனர்.

இதனிடையே கடந்த நான்காம் தேதி இரு சக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தண்ணீர்குளத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு கால்களில் படுகாயம் ஏற்பட்டு திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக, சந்திரய்யாவை கடந்த எட்டாம் தேதி பென்னலூர்பேட்டை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இதனால் சந்திரய்யா மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

டிராக்டர் ஓட்டுநர் உயிரிழப்பு

தொடர்ந்து நேற்று முதல் சந்திரய்யா காணாமல் போனதாகவும் அவரை உறவினர்கள் தேடிய நிலையில், தற்போது மாந்தோப்பில் வயர் மூலம் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்திருப்பதாகவும் இது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். எனவே இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள், ஊத்துகோட்டை திருவள்ளூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறை அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்கலாமே: திருநங்கையாக கலக்கியுள்ள தல அஜித் பட வில்லன்

Intro:திருவள்ளூர் அருகே மாந்தோப்பில் மர்மமான முறையில் டிராக்டர் ஓட்டுநர் உயிரிழப்பு உரிய விசாரணை நடத்தக் கோரி கிராம மக்கள் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Body:திருவள்ளூர் அருகே மாந்தோப்பில் மர்மமான முறையில் டிராக்டர் ஓட்டுநர் உயிரிழப்பு உரிய விசாரணை நடத்தக் கோரி கிராம மக்கள் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

திருவள்ளூர் மாவட்டம் கூனி பாளையத்தில் உள்ள மாந்தோப்பில் ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் சந்திரய்யன் வயர் மூலம் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழந்து கிடப்பதாக
பென்னாலூர் பேட்டை போலீசாருக்கு அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்ர்கள் அளித்த தகவலின்பேரில் உடலை மீட்டு போலீசார்
விசாரணை மேற்கொண்டனர் இந்தநிலையில் சந்திரய்யன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ராஜபாளையம் கிராம மக்கள் மற்றும் அவரது உறவினர்கள் அங்குவந்தனர் கடந்த நான்காம் தேதி இரு சக்கர வாகனத்தின் மீது டாக்டர் மோதிய விபத்தில் தண்ணீர் குளத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு கால்களில் படுகாயம் ஏற்பட்டு திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக சந்திரய்யாவை கடந்த எட்டாம் தேதி பென்னலூர் பேட்டை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதாகவும் இதனால் மன உளைச்சலில் அவர் இருந்து வந்த நிலையில் நேற்று முதல் காணாமல்போனதாகவும் அவரைத் தேடி வந்தநிலையில் தற்போது சந்தேகத்துக்கிடமான முறையில் மூன்று அடி உயரத்தில் மாந்தோப்பில் வயர் மூலம் தூக்கில் தொங்கியபடி உயிர் இழந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஊத்துகோட்டை திருவள்ளூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அங்கு வந்த போலீசார் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர் உயிரிழந்த சந்திராவிற்கு கிரிஜா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளது குறிப்பிடத்தக்கதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.