திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு உள்ளூர் பறவைகள் முதல் வெளிநாட்டுப் பறவைகள் வரை உள்ளன. இந்நிலையில், பழவேற்காடு ஊராட்சிக்குட்பட குளத்துமேடு பகுதியில் நான்கு காகங்கள் திடீரென உயிரிழந்துள்ளன.
கடந்த நான்கு நாள்களாக பறவைகள் ஆங்காங்கே ஒன்றும் இரண்டுமாக இறந்து போயுள்ளன. இன்று (ஜன.14) மட்டும் நான்கு காகங்கள் திடீரென இறந்துள்ளன. இது குறித்து அப்பகுதி மக்கள் பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணனிடம் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து வருவாய் துறையினர், கால்நடை துறையினர், வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு குளத்துமேடு பகுதியில் இறந்து கிடந்த காகங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பறவைக் காய்ச்சல் : பண்ணை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கேரள அரசு முடிவு