திருவள்ளூர் மாவட்டம், நசரத்பேட்டை ஆர்டிஓ அலுவலக சோதனை சாவடி அருகில் போதை பொருள் நுண்ணறிவு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியே லாரியில் வந்த நான்குபேரை வழிமறித்து சோதனை செய்த போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார்(28), மதி(42), ரமேஷ்(24), ராஜா(38) என்பதும், அவர்கள் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த காவல் துறையினர் 264 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து பின் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி நான்கு பேருக்கும் பத்தாண்டு சிறை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபாராத தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக ஒராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'கஞ்சா பார்ட்டி' வைத்த தாயும் மகனும் கைது!