ETV Bharat / state

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் விரைவில் பூங்கா: நாடாளுமன்ற உறுப்பினர்

author img

By

Published : Dec 2, 2020, 7:41 PM IST

திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் பூங்கா அமைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் பூங்கா

திருவள்ளூரில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பொன்னையாவை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் ஏஜி சிதம்பரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் கூறுகையில், "நவம்பர் 28ஆம் தேதி ஆவடி நகராட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது அவர்கள் கண்ணிகாபுரம் மார்க்கெட் பகுதியில் கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.

அதை மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளேன். கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்றது.

திருவள்ளூர் கார் தொழிற்சாலை, திருத்தணி சர்க்கரை ஆலையில் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படும். பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் பூங்கா அமைக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தை கூட்ட காங்கிரஸ் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.