ETV Bharat / state

வகுப்பறை சுவற்றின் டைல்ஸ் விழுந்து மாணவன் காயம்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்! - வகுப்பறை சுவற்றின் டைல்ஸ் விழுந்து மாணவன் காயம்

ஆவடி அருகே தனியார் பள்ளியின் வகுப்பறை சுவற்றின் டைல்ஸ் பெயர்ந்து விழுந்ததில் 6ஆம் வகுப்பு மாணவனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வகுப்பறை சுவற்றின் டைல்ஸ் விழுந்து மாணவன் காயம்; பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

author img

By

Published : Jul 12, 2022, 7:33 PM IST

திருவள்ளூர்: ஆவடி அடுத்த பருத்திபட்டு பகுதியில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1 முதல் 12ஆம் வகுப்புவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் 6ஆம் வகுப்பு மாணவன் இளந்திரையன் பள்ளி முடிந்தநிலையில் மாலை பெய்த மழையின் காரணமாக பள்ளி வளாகத்தினுள் நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, இளந்திரையன் சக மாணவருடன் தண்ணீர் குடிக்க சென்றபோது, யூகேஜி வகுப்பறையின் வெளிப்புற சுவற்றில் இருந்த கனமான டைல்ஸ் கற்கள் மொத்தமாக பெயர்ந்து மாணவன் மீது விழுந்துள்ளது. இதில் இளந்திரையன் நெஞ்சு பகுதி மற்றும் இடது கையில் காயம் ஏற்பட்டது. மயக்கமுற்ற மாணவனை மீட்டு, பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

வகுப்பறை சுவற்றின் டைல்ஸ் விழுந்து மாணவன் காயம்; பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

இதுகுறித்து இளந்திரையனின் பெற்றோர் பள்ளி முதல்வரை தொடர்பு கொண்டுள்ளனர். பள்ளி நிர்வாகம் சார்பில் முறையான பதிலளிக்காமலும், பள்ளி முடிந்த பின்னர் நடைபெற்ற சம்பவத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல எனவும் அலட்சியமாக கூறியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகத்தினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி காவல்துறையினர் பெற்றோரை சமாதானப்படுத்தி, விசாரணை மேற்கொண்டனர். சிறுவனின் பெற்றோர் கூறுகையில், இது போன்று ஒரு சம்பவம் மீண்டும் நடைபெற கூடாது எனவும் பள்ளி கட்டடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டி; பணிகளை துரிதப்படுத்த ஸ்டாலின் அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.