திருவள்ளூர் மாவட்டம் பூங்கா நகரில் அமைந்துள்ள யோக ஞான தட்சிணாமூர்த்தி திருக்கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைவதையொட்டி நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ சுக்த ஹோமம், லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ காளி ஹோமம், நவகிரக ஹோமம், யோக ஞான தட்சிணாமூர்த்தி அஸ்தர ஹோமம், மூலமந்த்ர ஹோமம் மகா பூர்ணாஹூதி, உள்ளிட்ட பூஜைகளும் யாகங்களும் நடைபெற்றது.
இவ்வழிபாட்டில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆளுநர் வருகையையொட்டி ஒரே இரவில் விழா ஏற்பாடுகளை அம்மாவட்ட அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதையும் படியுங்க:
மனதை தேற்றிக்கொள்கிறேன்... நீ கடவுளின் பிள்ளை! - விஜயபாஸ்கர் உருக்கம்!