திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 77வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவரும், கடம்பத்தூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவருமான எம்.கே. ரமேஷ் தலைமை தாங்கினார். அவர் பள்ளி வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அங்கு கூடியிருந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.ரமேஷ் தனது சொந்த செலவில் 6 லட்ச ரூபாய் மதிப்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் மேஜை, நாற்காலிகள் போன்றவற்றை வழங்கினார். அதை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தன் சொந்த செலவில் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளியறை கட்டிடம் கட்டி தருவதாக கூறினார். அதைத் தொடர்ந்து உளுந்தை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தூய்மையான குடிநீர், கிராமங்கள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள், சாலை வசதி, சாலையை விரிவாக்கம் செய்து தரமான சாலைகள் அமைத்தல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: நகை வியாபாரியிடம் நகை பறித்த கொள்ளைக் கும்பல்.. போலீசில் சிக்கியது எப்படி?