கரோனா தொற்று அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கத்தில் இந்த ஊரடங்கால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகின.
இந்நிலையில், வறுமையில் வாடிய குடும்பங்களுக்கு திருவள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் ஏற்பாட்டில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி. வேணு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் அரிசி, காய்கறிகள், சோப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். பின்னர் அப்பகுதியில் கிருமிநாசினி அடிக்கும் பணியையும் அவர்கள் தொடங்கி வைத்தனர்.