திருவள்ளூர்: கரோனா இரண்டாவது அலையின் தீவரம் காரணமாக கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள், ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருந்துவந்தது. இதைத்தொடர்ந்து, பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன. அந்தவகையில், பொன்னேரி அரசு மருத்துவமனையிலே ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய தலைமை மருத்துவர் அனுரத்னா மேற்கொண்ட முயற்சியின் விளைவாக தனியார் நிறுவனம் சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் சிஎஸ்ஆர் நிதி மூலம் நன்கொடையாக அளிக்கப்பட்டது.
நிமிடத்திற்கு 500லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இயந்திரம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் நிறுவப்பட்டு கடந்த இருதினங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு ரிப்பன்வெட்டி இயந்திரத்தின் செயல்பாடுகளைத் தொடங்கிவைத்தார். மேலும், 12 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை் பிரிவையும் அமைச்சர் திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஒரு கோடி மதிப்பில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம், தீவிர சிகிச்சைப் பிரிவு வளாகம் திறப்பு