ETV Bharat / state

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து குதிரை வண்டியில் சென்று வாக்கு சேகரித்த திமுகவினர்! - TN Election 2021

பூந்தமல்லி திமுக வேட்பாளர், பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குதிரை வண்டியில் சென்று வாக்கு சேகரித்த விதம், பொதுமக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

குதிரை வண்டியில் வந்து வாக்கு சேகரித்த திமுக

author img

By

Published : Mar 30, 2021, 8:40 AM IST

திருவள்ளூர்: பூந்தமல்லி (தனி) தொகுதியின் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி தொகுதிக்குட்பட்ட காக்களுர், ஈக்காடு, புன்னப்பாக்கம், அரண்வாயல், திருவூர் ஆகிய கிராம ஊராட்சிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் குதிரை வண்டியில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி அவர் வாக்கு சேகரித்தார். அவர் குதிரை வண்டியில் சென்று வாக்கு சேகரித்தபோது அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் கைகளை அசைத்தபடி பூக்களைத் தூவியும், பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் ஆரவாரத்துடனும் வரவேற்றனர்.

அப்போது பேசிய கிருஷ்ணசாமி ”மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் விலையைக் குறைக்காமல் இருப்பதினால், அது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதுபோல விலைவாசியும் உயந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் இவற்றைக் குறைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும் வசதி படைத்தவர்களும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். எனவே தான் இதனைக் கண்டித்தும், பொதுமக்களுக்கு உணர்த்து விதமாகவும் குதிரை வண்டியில் பிரச்சாரம் செய்கிறேன். திமுக ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்’ என்றார்.

அதுபோல புட்லூர் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பூந்தமல்லி வேட்பாளருக்கு திமுக கிளைச் செயலாளர் லாசர் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்றார். மேலும் புட்லூர் பகுதிக்கு சிறப்பான சாலை அமைத்து தருவதோடு, சீக்கிரமாக மேம்பாலம் திறக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

இதையும் படிங்க: ' மத்திய அரசுடனான உறவு மாநில உரிமையை பாதுகாக்கவே...' - ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.