சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம். நிவர் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இந்த மழையால் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர், அம்மப்பள்ளி அணையிலிருந்தும், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3ஆயிரத்து 231 மில்லியன் கன அடி ஆகும். இங்கு சேமிக்கப்படும் தண்ணீர் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளில் இணைப்பு கால்வாய் வழியாக நீர் அனுப்பப்பட்டு அங்கிருந்து சென்னை குடிநீருக்கு பயன்படுத்தப்படும்.
பூண்டி ஏரி கடந்த 25ஆம் தேதி காலை நிலவரப்படி ஆயிரத்து 842 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இருப்பு, ஆயிரத்து 872ஆக உயர்ந்தது. அதேபோன்று சோழவரம், புழல் ஏரிகளிலும் நீர்மட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பூண்டி ஏரியின் நீர்மட்டம் 35 அடி வரை தற்போது 33 அடியை எட்டியது.
இதனைத்தொடர்ந்து பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா தலைமையில் செயற்பொறியாளர் பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட்டனர்.
மொத்தம் உள்ள 16 மதகுகளில் 5, 6, 11 ஆகிய மூன்று மதகுகளை ஐந்து நிமிடம் இடைவெளி விட்டு திறந்துவிட்டனர். தண்ணீர் திறக்கும்போது அபாய சங்கு எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: தமிழர்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்ப மாவீரர் நாளில் உறுதியேற்போம் – சீமான் சூளுரை