திருவள்ளூர் மாவட்டம் கபிலர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணப்பன்(46). அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம்(ஜூலை 25) இரவு வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
அவர் மணவாள நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் வேன் அவரது வாகனத்தின் மீது மோதியது.
அதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பணியில் இருந்த உதவி காவல் ஆணையர் உயிரிழப்பு!