திருவள்ளூர் மாவட்டம் வண்டலூர் - மீஞ்சூர் சாலை குன்றத்தூர் அருகே அதிவேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணம் செய்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
அவ்வழியேச் சென்ற வாகன ஓட்டிகள் சம்வவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த காரின் ஓட்டுனரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் திருநின்றவூர் பாலாஜி நகரைச் சேர்ந்த செந்தில்கனி(43) என்பதும் அவர் குடி போதையில் காரை ஓட்டி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் உடன் வந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஆந்திராவில் கார் லாரி மோதி பயங்கர விபத்து: 4 பேர் உயிரிழப்பு!