ETV Bharat / state

திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்! - மேல்நல்லாத்தூர்

திருவள்ளூர்: மின் வாரியத்தைக் கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

road roko
author img

By

Published : May 10, 2019, 10:15 AM IST

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த நிலையில், இப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக சரிவர மின் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து கேட்பதற்கு நேற்று மின் வாரிய அலுவலர்களிடம் பொதுமக்கள் முறையிட்டபோது, அவர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணவாளநகர் காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையாக மின் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த திடீர் மறியலால், திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் அருகே கடந்த 3 நாட்களாக சரியாக மின் விநியோகம் செய்யாததை கண்டித்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள்  இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது :

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தில் 1000-க்கும் குடும்பத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த 3 நாட்களாக சரிவர மின் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் ஆகியோர் பகல் மற்றும் இரவு நேரங்களில் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது தொடர்பாக மணவாளநகர் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று மின் விநியோகம் சரிவர விநியோகித்தாதது குறித்து முறையிட்ட போது மின் வாரிய  அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மணவாளநகர் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முறையாக மின்விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இப்போராட்டம் காரணமாக திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வாகன போக்குவரத்து ஒரு மணிநேரம் வரையில் பாதிக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். 

Visual send in ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.