திருவள்ளூர் மாவட்டம், திருவூர் ஊராட்சியில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக, வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 'முழுமையான ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கி திருவள்ளூர் மாவட்டம்' என்ற தலைப்பில், ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைப்பெற்றது.
இந்தக் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா தலைமையில் உலக சுகாதார அமைப்பு முதன்மை விஞ்ஞானி மரு. சௌமியா சாமிநாதன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஆர். சம்பத் குமார், வேளாண்மை அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் முனைவர். பி. சாந்தி, வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க... பாரதம் அறக்கட்டளை சார்பில் விவசாய பொருளாதார மேம்பாட்டு கருத்தரங்கம்