ETV Bharat / state

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வட மாநில இளைஞருக்கு தர்ம அடி; மற்றொருவருக்கு போலீசார் வலைவீச்சு - ஆரம்பாக்கம் காவல் நிலையம்

இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற வடமாநில பைக் திருடர்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் வலைவீச்சு
போலீசார் வலைவீச்சு
author img

By

Published : Jul 30, 2022, 12:44 PM IST

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே வட மாநில இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வாகனத்தை திருடி சென்ற வட மாநில திருடர்களை பிடிப்பதில் தீவிரம் காட்டிய உள்ளூர் இளைஞர்கள், கவரப்பேட்டை அருகே 2 வட மாநில இளைஞர்களை திருடு போன இருசக்கர வாகனத்துடன் கையும் களவுமாக பிடித்தனர்.

கையும் களவுமாக பிடிபட்ட வட மாநில சீரியல் பைக் திருடர்

அப்போது கையில் இருந்த ஆயுதத்துடன் சண்டையிட்ட வடமாநில இளைஞர்களை லாவகமாக மடக்கிப் பிடித்த நிலையில் ஒருவன் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இளைஞர்களிடம் பிடிபட்ட வட மாநில திருடனை தனிப்படை போலீசார் கைது செய்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் அதே இடத்தில் காணாமல் போன 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காணாமல் போன 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன திருட்டில், வடமாநில இளைஞர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு உதவ உலக வங்கி மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.