திருவள்ளூர் மாவட்டத்தில் விடையூர், புல்லரம்பாக்கம், புதுமாவிலங்கை, மோவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது விளை நிலங்களில் வேர்க்கடலை, கரும்பு, நெல் போன்ற பயிர்களை நடவு செய்வது வழக்கம். அனால் இந்தாண்டு பருவமழை பெய்யாததால், இங்குள்ள பெரும்பாலான ஏரிகள், குளம், கிணறுகள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டது. இதனால் அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை நடவு செய்யாமல் குறைவான தண்ணீரில் விளையக்கூடிய பயிர்களையே விவசாயிகள் நடவு செய்து வருகிறனார். இதில் குண்டுமல்லி பூச்செடிகள் வளர்ப்பதற்கு குறைவான உரம், தண்ணீர், ஆட்கள் போதுமானதால் விவசாயிகள் தங்களது நிலத்தில் குண்டுமல்லி பூச்செடிகள் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குண்டுமல்லி பூ சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் - thiruvallur
திருவள்ளூர்: நிலத்தடி நீர் குறைவால் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் குண்டுமல்லி பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விடையூர், புல்லரம்பாக்கம், புதுமாவிலங்கை, மோவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது விளை நிலங்களில் வேர்க்கடலை, கரும்பு, நெல் போன்ற பயிர்களை நடவு செய்வது வழக்கம். அனால் இந்தாண்டு பருவமழை பெய்யாததால், இங்குள்ள பெரும்பாலான ஏரிகள், குளம், கிணறுகள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டது. இதனால் அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை நடவு செய்யாமல் குறைவான தண்ணீரில் விளையக்கூடிய பயிர்களையே விவசாயிகள் நடவு செய்து வருகிறனார். இதில் குண்டுமல்லி பூச்செடிகள் வளர்ப்பதற்கு குறைவான உரம், தண்ணீர், ஆட்கள் போதுமானதால் விவசாயிகள் தங்களது நிலத்தில் குண்டுமல்லி பூச்செடிகள் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Body:திருவள்ளூர் மாவட்டம் செய்திகள் சுரேஷ்பாபு குண்டுமல்லி பற்றிய செய்தி தொகுப்பு
திருவள்ளூரை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் குறைவால், குண்டுமல்லி பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த விடையூர், புல்லரம்பாக்கம், புதுமாவிலங்கை, மோவூர் உட்பட பல்வேறு கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள விவசாயிகள். தங்களது விளை நிலங்களில் வேர்க்கடலை, கரும்பு, நெல் போன்ற பயிர்களை நடவு செய்வது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு எதிர்பாராதவிதமாக பருவ மழை பொய்த்து விட்டது. இதனால் இங்குள்ள பெரும்பாலான ஏரிகள், குளம், கிணறுகள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதுபோல் முக்கிய நீர் நிலைகள் வறண்டு போனதால், விளைச்சலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை விவசாயிகள் நடவு செய்யவில்லை.
இதற்கு மாற்றாக குறைவான தண்ணீரில் விளையக்கூடிய பயிர்களையே விவசாயிகள் நடவு செய்கின்றனர். இதில் குண்டுமல்லி பூச்செடிகள் வளர்ப்பதற்கு குறைவான தண்ணீர் போதுமானது. மேலும் ஆட்கள், உரம் போன்றவைகளும் குறைந்த அளவில் தேவைப்படுவதால் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலத்தில் குண்டுமல்லி உட்பட பல பூச்செடிகள் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன்மூலம், தினசரி கிடைக்கும் வருமானத்தில், அன்றாட குடும்ப செலவுகளை கவனித்துக் கொள்கின்றனர்.
Conclusion: