ETV Bharat / state

மருத்துவம் பயின்ற புதிய ஆட்சியர், எஸ்பி: கரோனா இல்லாத மாவட்டமாக திருவள்ளூர் உருவாக வாய்ப்பு

திருவள்ளூர்: மருத்துவம் பயின்ற புதிய ஆட்சியர், காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் கரோனா தொற்று திருவள்ளூர் மாவட்டத்தில் இல்லாத நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

author img

By

Published : Jun 15, 2021, 3:28 AM IST

திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸை தமிழ்நாடு அரசு நியமனம்செய்துள்ளது.

புதிதாக மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்கும் ஆல்பிஜான், கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரத்தில் பிறந்தவர் இவரது அண்ணன் பொறியியல் படிப்பை முடித்துள்ளார்.

பள்ளி வயதிலேயே வினாடி வினா போட்டிகளில் மிகவும் ஆர்வம்கொண்டிருந்த ஆல்பிஜான் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பை முடித்துள்ளார்.

மருத்துவப் படிப்புக்கான பயிற்சியை 2012இல் முடித்து பின்னர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பகுதிநேர மருத்துவராகப் பணியாற்றிவந்துள்ளார்.

மேலும் அவருடன் படித்த நண்பர் ஒருவர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற தானும் இந்திய ஆட்சிப் பணியில் சேர வேண்டும் என்று விருப்பம் கொண்டு 2012 முதல் தேர்வுக்கான வழிமுறைகளைப் படிக்க தொடங்கி 2012 நவம்பரில் நடந்த முதன்மைத் தேர்வில் இந்திய அளவில் நான்காம் இடம் பிடித்து தேர்ச்சி அடைந்தார்.

2013 பேட்ச் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த ஆல்பிஜான் 2015இல் துணை ஆட்சியராக தேவகோட்டையில் பணிபுரிந்தார்.

பின்னர் 2017 தூத்துக்குடியில் ஆணையராகவும் பின்னர் சென்னையில் சுகாதாரத் துறை இணை இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டார், தற்பொழுது தமிழ்நாட்டு அரசால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக ஆல்பிஜான் வர்கீஸ் நியமனம்செய்யப்பட்டுள்ளார்.

அதுபோல் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பு வகித்துவந்த அரவிந்தன் சென்னை தனிப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சென்னை காவல் துறை தலைமை அலுவலகத்தில் கணினிப் பிரிவு கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பல் மருத்துவம் படித்த மருத்துவர் வருண்குமார் 2010ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் இந்தியாவிலேயே மூன்றாம் இடம் பிடித்து தேர்வானார், 2011ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

முதன்முதலில் அருப்புக்கோட்டையில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பு வகித்தார்.

அங்கிருந்து சென்னை தலைமை அலுவலகத்தில் கணினிப் பிரிவு அலுவலராகப் பொறுப்பு வகித்துவந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பரிந்துரையின்பேரில் இன்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொது மருத்துவம் படித்து 2012இல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் நாட்டிலேயே நான்காம் இடம் பிடித்த ஆல்பிஜான் வர்கீஸ் 2013 பேட்ச் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தவர், அதுபோல் வருண்குமார் 2010ஆவது பேச் சிவில் சர்வீஸ் தேர்வில் நாட்டிலேயே மூன்றாவது இடம் பிடித்து தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் என இருவரும் மருத்துவம் பயின்றவர்கள் என்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லாத நிலை ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.