ETV Bharat / state

கீழச்சேரி பள்ளியில் மாணவி தற்கொலை;தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் விசாரணை - National Commission for Protection of Child Rights

திருவள்ளூர் கீழச்சேரி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அப்பள்ளியில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி தற்கொலை
மாணவி தற்கொலை
author img

By

Published : Jul 28, 2022, 12:19 PM IST

திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் உள்ள சாக்ரெட் ஹார்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி கடந்த ஜூலை 25ஆம் தேதி காலை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பள்ளி நிர்வாகம் சார்பில் கொடுத்த புகாரின் பேரில், மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், டிஐஜி சத்தியப்பிரியா, எஸ்.பி பெகெர்லா செபாஸ் கல்யாண் ஆகியோர் பள்ளி நிர்வாகி ஆசிரியர்கள் சக மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பள்ளி மாணவிகளின் மரணம் குறித்து காவல்துறை விசாரணை செய்யக்கூடாது என்ற நீதிமன்ற ஆணையை அடுத்து டிஜிபி சைலேந்திரபாபு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். அதனையடுத்து சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

இந்நிலையில், உயிரிழந்த பள்ளி மாணவியின் தற்கொலை தொடர்பாக இன்று (ஜூலை 28) தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், எஸ்.பி., பெகெர்லா செபாஸ் கல்யாண், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், சார்பு ஆட்சியர் மகாபாரதி, வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விசாரணை முதலில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பள்ளி நிர்வாகி, ஆசிரியர்கள், விடுதி வார்டன் மற்றும் சக மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து மாணவியின் சொந்த ஊரான தெக்கலூர் கிராமத்தில் சென்று ‌மாணவியின் பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருவள்ளூர் மாணவி உயிரிழப்பு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.