திருவள்ளூர்: செங்குன்றம் அடுத்த ஜோதி நகர் நான்காவது தெருவைச் சேர்ந்த வீரா என்கிற வீரராகவன், கௌதம் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் (ஜூன் 19) மாலை 6 மணி அளவில் அவரது வீட்டு அருகே பேசிக் கொண்டிருந்தனர்.
எதிர்பாராத தாக்குதல்
அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக, இருவரையும் ஒரு கும்பல் தாக்கியது. அதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
![murder attempt thiruvallur murder attempt thiruvallur news thiruvallur latest news crime news murder திருவள்ளூர் செய்திகள் கொலை முயற்சி கொலை திருவள்ளூர் கொலை சம்பவம் காதலித்து ஏமாற்றிய நபர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12207478_tvl.jpg)
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த செங்குன்றம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தாக்குதலில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23), அப்துல்ரகுமான் (22), சஞ்சய் (18) ஆகிய மூன்று பேரை கைதுசெய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின் அவர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவந்தனர்.
வெளிவந்த தகவல்
விசாரணையின்போது வீரராகவன், கௌதம் ஆகியோரின் நண்பரான கணேசன், கடந்த ஆகஸ்ட் மாதம் அப்துல் ரகுமானின் அக்கா ரிகானா என்பவரை காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியுள்ளார்.
இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் கணேசன் கொடுத்த தகவலின்பேரில் அப்துல் ரகுமான் நண்பரான மணிகண்டன் கொடுத்த புகாரில் செங்குன்றம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நிலுவையில் உள்ள நிலையில், இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவததில் தொடர்புடைய, தலைமறைவான விக்கி என்பவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் 3 கோடியை நெருங்கும் கரோனா பாதிப்பு