ETV Bharat / state

ஆவடியில் அனுமதியின்றி கட்டப்பட்ட குடியிருப்புக்கு சீல் - நகராட்சி அலுவலர்கள் அதிரடி - பூட்டி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சிஎம்டிஏ அனுமதியின்றி சுமார் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பை நகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

குடியிருப்புக்கு சீல்
author img

By

Published : Apr 30, 2019, 7:50 AM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சிப் பகுதியில் உள்ள திருமுல்லைவாயிலில் கார்த்திக் என்பவர் ஆறு வீடுகள் கொண்ட மூன்று அடுக்குமாடிக் கட்டடத்தை கட்டி வந்தார்.

இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ள கட்டடத்தை நகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அனுமதியின்றி இக்கட்டடம் கட்டப்பட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, கட்டட ஆய்வாளர் தினகரன் தெரிவித்தார்.

கட்டட ஆய்வாளர் தினகரன்

மேலும், ஆவடி நகராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு முதல்கட்டமாக நோட்டீஸ் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். இந்தக் கட்டடங்களுக்கும் விரைவில் சீல் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் ஆவடி பகுதி குடியிருப்புவாசிகள் பீதியடைந்துள்ளனர்.

Intro:ஆவடியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் சி.எம்.டி.ஏ அனுமதியின்றி சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.இதனால் அனுமதி இல்லாமல் கட்டியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Body:ஆவடி நகராட்சி பகுதியில் உள்ள திருமுல்லைவாயிலில் கார்த்திக் என்பவர் ஆறு வீடுகள் கொண்ட மூன்று அடுக்கு மாடி கட்டி வந்தார்.அதன் இறுதி கட்ட பணி முடியும் தருவாயில் இன்று நகராட்சி அதிகாரிகள் வந்து பூட்டி சீல் வைத்தனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது: இந்த கட்டிடம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திலும் சி.எம்.டி.ஏ அனுமதி பெறவில்லை.அதேபோல் ஆவடி நகராட்சியிலும் அனுமதி பெறவில்லை என தெரியவந்தது.ஆணையாளர் அறிவுரையின்படி இந்த கட்டிடம் சீல் வைக்கப்பட்ட தாக தெரிவித்தனர்.மேலும் ஆவடி நகராட்சி எல்லைக்குள் கட்டிட அனுமதி பெறாமல் கட்டியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் முதல்கட்டமாக நோட்டீஸ் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்த பில்டிங் இன்ஸ்பெக்டர் தினகரன் பின்னர் அனைத்தையும் சீல் வைக்க படும் என்று தெரிவித்தார்.அதனால் ஆவடி பகுதி குடியிருப்புவாசிகள் பீதியடைந்துள்ளனர்.

Conclusion:அதனால் ஆவடி பகுதி குடியிருப்புவாசிகள் பீதியடைந்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.