திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திருமலை சிவசங்கரன் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது ஜெயக்குமார் பேசுகையில், "திருவள்ளூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள அனைத்து குறைபாடுகளும் துரிதமாக நிறைவேற்றப்படும். திருவள்ளூருக்கு முதல்முறையாக மருத்துவக் கல்லூரியை கொண்டுவந்தது நான்தான்" என்று பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், தான் லஞ்சம் வாங்கினால் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் ஒருகாலமும் லஞ்சம் வாங்கமாட்டேன் என்றும் அவர் பகிரங்கமாக மேடையில் கூறினார்.
இதையும் படிங்க: ஃபீலிங் ஆன இயக்குநர் இமயம், ஆங்கிரி ஆன ஜாகுவார்