ETV Bharat / state

ரயில் நிலையத்தில் மோடி படம்; பொன்னேரியில் இந்துமக்கள் கட்சி மனு! - modi

திருவள்ளூர்: பொன்னேரி ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தினை வைக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் ரயில் நிலைய அலுவலர்களிடம் மனு அளித்தனர்.

மோடி படம் வைக்க கோரிக்கை
author img

By

Published : May 30, 2019, 5:16 PM IST

மக்களவைத் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்று, மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி, இன்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், தேசிய அளவிலும் மாநில அளவிலும் உள்ள ரயில் நிலைய அலுவலகங்களில் பிரதமர் மோடியின் படத்தை வைக்கக்கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கோரிக்கை மனு இன்று அளிக்கப்பட்டது.

ரயில் நிலையத்தில் மோடி படம் வைக்கக்கோரி மனு!

இதில் ஒரு பகுதியாக, பொன்னேரி ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை வைக்கக்கோரி இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் சோமு ராஜசேகரன் தலைமையில் அக்கட்சியினர், ரயில் நிலைய மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், மோடியின் படத்தையும் ரயில் நிலைய அலுவலர்களிடம் அளித்தனர்.

Intro:பொன்னேரி ரயில் நிலையத்தில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி திருவுருவப்படத்தை வைப்பதற்கு இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி ரயில் நிலையம் அதிகாரியிடம் மனு அளித்தனர்.

Body:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் திரு உருவப் படத்தினை வைப்பதற்கு இந்து மக்கள் கட்சியினர் ரயில் நிலைய அதிகாரியிடம் மனு அளித்தனர். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் பிஜேபி ஆட்சி அமைத்து மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதை முன்னிட்டு தேசிய அளவிலும் மாநில அளவிலும் ரயில்நிலைய அலுவலகங்களில் பாரதப் பிரதமர் மோடியின் திருவுருவப்படத்தை வைப்பதை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று பொன்னேரி ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் திருவுருவப் படத்தை வைப்பதற்கு இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பில் ரயில் நிலைய மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.பின்னர் அவருடைய திரைப்படத்தையும் நிர்வாகிகள் ரயில் நிலைய அதிகாரிகளிடம் அளித்தனர் மாநில துணைத்தலைவர் சோமு ராஜசேகரன் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் அரசகுமார் வர்த்தக அணி தலைவர் கோபாலகிருஷ்ணன் கோட்ட பொறுப்பாளர் ராமர் மாவட்ட நிர்வாகிகள் மோகன் ஆகியோர் மனு அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.