திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 42).
இவர் செங்குன்றம் திருவள்ளூர் கூட்டு நேதாஜி சிலை அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். சுதாகர் நேற்று (டிச.09) வழக்கம்போல், வியாபாரம் முடித்து கடையை பூட்டி கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டார்.
இன்று காலையில் அருகில் உள்ள டீ கடையை திறக்க வந்த முரளி என்பவர் செல்போன் கடை திறந்து இருப்பதைக் கண்டு சுதாகருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, சுதாகர் விரைந்து வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் வைத்திருந்த ரூ. 32 ஆயிரம் ரொக்கம், இரண்டு பழைய செல்போன்கள் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து சுதாகர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல், கடந்த இரு நாள்களுக்கு முன்பு செங்குன்றம் மார்க்கெட், எம். கே.காந்தி தெருவில் செல்போன் கடையில் பூட்டு உடைக்கப்பட்டு செல்போன்கள் கொள்ளைப் போனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருவள்ளூரில் இரண்டு கோயில்களில் உண்டியல் பணம் திருட்டு: போலீசார் விசாரணை