திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் மாவூர் கிராமத்தில், கடந்த 3 மாதங்களாக, நெடுஞ்சாலை திட்டத்தின் மூலம், சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், NH-205 திருத்தணி - திருப்பதி நெடுஞ்சாலை முதல் ஏரிக்கரை வரை உள்ள, வயல் வெளிகளுக்கு மத்தியில் செல்லும், 200 மீட்டர் கிராம சாலையை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து, பொதுமக்கள் தெரிவித்த புகார்களின் அடிப்படையில், திருவள்ளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சாலையை மீட்டு, மீண்டும் பணியைத் தொடங்க வேண்டும். அதே பகுதியில் பழுதடைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை புதுப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : சொத்து விவகாரம்: ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற நபர் மீட்பு!