திருவள்ளூர்: பேரம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் மின்வாரியம் தொடர்பான குறைகேட்பு கூட்டம் நேற்று (ஜூன்.8) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேரம்பாக்கம் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்களின் புகார் மனுக்களை எம்எல்ஏவிடம் அளித்தனர்.
புகார் மனுக்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வி.ஜி. ராஜேந்திரன் மனுதாரர்களுக்கு உறுதியளித்தார்.
அப்போது கடந்த சில நாள்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட விசிக ஒன்றிய பொறுப்பாளர் காமேஷின் தாயார் தனது மருமகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.