ETV Bharat / state

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் ஆய்வு! - latest dengue news in tamilnadu

திருவள்ளூர்: தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை குறித்து சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

thiruvallur
author img

By

Published : Oct 22, 2019, 9:04 AM IST

திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல்கள் காரணமாக ஏராளமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இங்கு 15க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

நில வேம்பு குடிநீர், ஓ.ஆர்.எஸ் கஞ்சி ஆகியவை மருத்துவமனையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், டெங்கு காய்ச்சல் தடுப்புப் பிரிவில் உள்நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு

மேலும் அவர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்புவது குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சேகர், மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்து விளக்கமளித்தனர்.

இதையும் படிங்க: நாகையில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

Intro:திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சைப் பெற்று வருபவர்களை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்Body:
திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சைப் பெற்று வருபவர்களை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் 15-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனையடுத்து இன்று திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் நேரில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். நில வேம்பு குடிநீர் மற்றும் ஓஆர்எஸ் கஞ்சி ஆகியவை விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளை சென்னைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்புவது குறித்தும் கேட்டறிந்தார். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சேகர் உள்ளிட்ட மருத்துவர்கள் இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினரோடு வந்திருந்து விளக்கமளித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.