திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் பாடியநல்லூர் பகுதியில் நடைபெற்றது.
சோழவரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் மீ.வே. கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வடகிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினருமான சுதர்சனம் கலந்துகொண்டார்.
தொடர்ந்து வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்கள் குறித்து திமுக தொண்டர்களிடம் உரையாற்றினார். மேலும் கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சராக வெற்றிபெறச் செய்வோம் என கழக நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.