திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பாக 64ஆவது தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 27 வீரர், வீராங்கனைகளுக்கு 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெஞ்ஜமின், க. பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
அதன்பின் நிகழ்ச்சியின் பேசிய அமைச்சர் பெஞ்சமின், “தமிழ்நாடு அரசு மக்களின் நலன் காக்கும் அரசாக இருக்கிறது. கல்வியைப் போன்று விளையாட்டிலும் சிறப்புக் கவனம் செலுத்தி விளையாட்டுப் பல்கலைக்கழகத்தினை உருவாக்கி மேம்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
அரசு வேலைகளில் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு விழுக்காடு என்ற இடஒதுக்கீட்டினை மூன்று விழுக்காடாக உயர்த்தியது அவரது ஆட்சிக்காலத்தில்தான்” என்றார்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு குறித்து நாளை மறுநாள் முடிவு?