ETV Bharat / state

வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் திட்டம் தொடக்கம் - thiruvallur district news in tamil

கிராமப்புறங்களில் நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே படுத்த படுக்கையாக உள்ள நோயாளிகளுக்கு வீட்டிற்கு சென்று நேரடியாக சிகிச்சை அளிக்கும் வாகன வசதியை அமைச்சர் சா.மு. நாசர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

ministetr-nasar-started-the-vehicle-for-rural-patient-treatment
படுக்கை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வாகனம் தொடக்கி வைப்பு!
author img

By

Published : Jul 20, 2021, 8:14 AM IST

திருவள்ளூர்: ஈக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வலி தணிப்பு மற்றும் புணர்வாழ்வு சிகிச்சை திட்டம் சார்பாக கிராமப்புறங்களுக்கு வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிக்கும் வாகனத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " புற்றுநோய், முடக்கு வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க வசதி இல்லாமல் வீட்டிலேயே படுத்த படுக்கையாக முடங்கிக்கிடக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு சீரிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

மருத்துவமனையில் சேர வசதியில்லாத இதுபோன்ற நோயாளிகள் 9840327626 என்ற எண்ணிற்கு அழைத்தால் வாகனம் மூலம் வீட்டிற்கே வந்து இலவசமாக சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும். ஒன்றியத்திற்கு ஒரு வாகனம் என்ற அடிப்படையில் முதல் கட்டமாக மீஞ்சூர், கடம்பத்தூர், பூந்தமல்லி, எல்லாபுரம், பள்ளிப்பட்டு, உள்ளிட்ட ஐந்து ஒன்றியங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

படுக்கை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வாகனம் தொடக்கி வைப்பு!

இத்திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது." என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தன்னார்வலரின் முயற்சி: நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.