ETV Bharat / state

அனைத்துக் கோயில்களிலும் கண்காணிப்புக் கேமரா - சேகர்பாபு தகவல் - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

அனைத்துக் கோயில்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தவும், பணியாளர்களின்றி பூட்டிக் கிடக்கும் கோயில்களில் வழிபாடுகள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

sekarbabu
அமைச்சர் சேகர்பாபு
author img

By

Published : Jul 19, 2021, 7:41 PM IST

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியிலுள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு கலந்துகொண்டு குடமுழுக்குப் பணிகள் குறித்து கோயில் அறங்காவலர் குழுவிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆலோசனை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " 12 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள சிறுவாபுரி முருகன் கோயில் பழமை மாறாமல் உள்ளது. இரண்டு கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் குளத்தைச் சீரமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

600 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு

மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகக் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். இதுவரை சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான கோயில் நிலமும், 600 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகளும் மீட்கப்பட்டுள்ளன.

கோயில் நிலங்கள், சொத்துகள் அனைத்தும் ஓராண்டுக்குள் மீட்கப்பட்டு அதற்கான பட்டியல் வெளியிடப்படும். வருவாய் இன்றி பூட்டிக் கிடக்கும் கோயில்களில் போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அன்றாட வழிபாடுகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்துக் கோயில்களிலும் கண்காணிப்புக் கேமரா

பக்தர்கள் அதிகளவில் கூடும் கோயில்கள் மட்டுமின்றி அனைத்துக் கோயில்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, எருமை வெட்டி பாளையத்தில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோயிலுக்குச் சென்ற அமைச்சர், அதன் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: தமிழில் பதவியேற்ற விஜய் வசந்த்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.