தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு முதல்கட்டமாக ரூபாய் 2,000 கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் ரூபாய் 2,000 கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பால் வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிவாரண நிதி வழங்கினார்.
அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சியின்போது பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் பேசியதாவது, "திட்டங்களை செயல்படுத்துவதில் கலைஞர் 8 அடி பாய்ந்தால் மு.க.ஸ்டாலின் 16 அடி பாய்வார்" என்றார்.
இதையும் படிங்க: என்னை சந்திக்க வேண்டாம் : பழனிவேல் தியாகராஜன்