ETV Bharat / state

திருவள்ளூரில் மினி மாரத்தான் போட்டி! - மினி மாரத்தான் போட்டி!

திருவள்ளூர்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூரில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.

Mini Marathon Tournament at Tiruvallur
Mini Marathon Tournament at Tiruvallur
author img

By

Published : Jan 25, 2020, 6:56 PM IST

பத்தாவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புல்லரம்பாக்கம் காவல் நிலையம் வரை நடைபெற்றது.

மினி மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற இந்தப் போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் ஆய்வாளர் கண்ணபிரான் குடிநீர் கொடுத்து உற்சாகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலான விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கிவைத்து தானும் பங்கேற்று நடந்துசென்றார்.

திருவள்ளூரில் மினி மாரத்தான் போட்டி!

பின்னர் அவர், “ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயகக் கடமையை சரியாகப் பயன்படுத்த கட்டாயம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது 33 லட்சத்து எட்டாயிரத்து 752 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

தற்போது வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெறும் மையங்களிலும் கல்லூரிகளிலும் நடைபெறும் முகாம்களிலும் இளம் வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: தேசிய வாக்காளர் தினம் - உறுதிமொழி ஏற்பு

Intro:25_01_2020

திருவள்ளூர் மாவட்டம்

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி மற்றும் பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து தானும் பங்கேற்று சிறப்பித்தார் .

Body:25_01_2020

திருவள்ளூர் மாவட்டம்

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி மற்றும் பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து தானும் பங்கேற்று சிறப்பித்தார் கல்லூரிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார்

பத்தாவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளின் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புல்லரம்பாக்கம் காவல் நிலையம் வரை நடைபெற்ற இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற இந்த போட்டியில் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு டிஎஸ்பி கங்காதரன் ஆய்வாளர் கண்ணபிரான் குடிநீர் கொடுத்து உற்சாகப் படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்து தானும் பங்கேற்று நடந்து சென்றார் ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமையை சரியாக பயன்படுத்த கட்டாயம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது 33 லட்சத்து 8 ஆயிரத்து 752 வாக்காளர்கள் இருப்பதாகவும் தற்போது வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெறும் மையங்களிலும் கல்லூரிகளிலும் நடைபெறும் முகாம்களிலும் இளம் வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் கேட்டுக்கொண்டார்.

பேட்டி

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.