ETV Bharat / state

பட்டினியால் மரணித்த வடமாநிலத் தொழிலாளி! - North Indian Workers

திருவள்ளூர்: நடைபயணமாகச் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளி பட்டினியால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநில தொழிலாளர்கள்  வடமாநில தொழிலாளி உயிரிழப்பு  திருவள்ளூரில் வடமாநிலத் தொழிலாளி பட்டினியால் உயிரிழப்பு  North Indian Worker Dead in Thiruvallur  North Indian Worker Dead  North Indian Workers
North Indian Worker Dead
author img

By

Published : May 19, 2020, 5:06 PM IST

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக வேலையின்றி வறுமையில் வாடி வரும் இந்தத் தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக கூட்டம் கூட்டமாக நடந்தே தங்களது சொந்த மாநிலத்திற்குச் செல்ல முயன்று வருகின்றனர்.

அவர்களை ஆந்திர எல்லையான பனங்காடு என்னும் பகுதியில் அம்மாநில காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளி ஒருவர் பட்டினியால் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று தண்ணீர் தெளித்து அவரை எழுப்பியுள்ளனர். ஆனால், அவரிடம் எந்த அசைவும் இல்லாததால் மருத்துவரை வரவழைத்து பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.

பின்னர் அவரிடமிருந்த பையை ஆய்வு செய்தபோது அதிலிருந்த ஆதார் அட்டை மூலம் உயிரிழந்தவர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம் தீ வாஸ் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கவரப்பேட்டை காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொடர் பட்டினியால் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சந்தேகத்தின் பேரில் காவல்துறை விசாரணை: தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.