கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிப் பகுதியில், உள்ள ஏழைகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு 3 வேலையும் உணவு அளிப்பதற்காக, அம்மா உணவகம் தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருந்தது.
அதன் பெயரில் முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் திருத்தணி கோ ஹரி, தனது சொந்த நிதியிலிருந்து தூய்மைப் பணியாளர்களுக்கு முகக் கவசம் மற்றும் கைக்கவசம் ஆகியவற்றை வழங்கினார்.
மேலும், அம்மா உணவகத்திற்கு மூன்று வேளையும் உணவு வழங்குவதற்குத் தேவையான காய்கறிகள், அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள் போன்றவற்றை தனது சொந்த பணத்தில் வாங்கி, திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியிடம் வழங்கினார்.
இதையும் படிங்க: வானதியின் மரியாதைக்குள் ஒழிந்திருந்த வன்மம்: 'செருப்பு ராக்கின் மேல் சட்டமேதை'